/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி பகுதியில் மினிபஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்புஉடன்குடி பகுதியில் மினிபஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு
உடன்குடி பகுதியில் மினிபஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு
உடன்குடி பகுதியில் மினிபஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு
உடன்குடி பகுதியில் மினிபஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்பு
உடன்குடி : உடன்குடி பகுதியில் மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் தெற்கு பிச்சிவிளை உட்பட 30க்கு மேற்பட்ட கிராம பள்ளி மாணவர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி அரசு முறையாக டவுன் பஸ்களை இயக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மினி பஸ் சேவையும் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில தனியார் வாகனங்கள் மினி பஸ்ஸில் வந்த மாணவர்களை வேண்டுமென்றே தங்களது வாகனத்தில் ஏற்றுவதில்லை. மாலை 4 மணிக்கு பள்ளியில் இருந்து வரும் மாணவிகள் இரவு 7 மணிக்கு வரும் டவுன் பஸ்ஸில்தான் தங்களது ஊருக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகளிடம் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் இருந்தும் முறையாக பஸ் இயக்கப்படாததால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடன்குடி தெற்கு பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக அரசு டவுன் பஸ் உடன்குடி-பெரியதாழைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கருமேனி ஆற்றின் குறுக்கே தாண்டவன்காடு-பிச்சிவிளை இணைப்பு பாலத்தை தரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு பிச்சிவிளையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டதால் உடன்குடி-சாத்தான்குளம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கிராம மக்களுக்கு போதுமானதாக இல்லை. இந்நிலையில் காரங்காடு கிராமத்திற்கும் குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது காரங்காடு கிராமத்திற்கும் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே காரங்காடு கிராமத்திற்கு அளவுக்கு அதிகமான குடிநீர் இருப்பதால் தெற்கு பிச்சிவிளைக்கு முழுவதுமாக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்செந்தூர் சட்டசபை தொகுதி காங்., தேசிய பேரவை தலைவர் சுதாகர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.