சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்
சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்
சுதந்திர தின விழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஜூலை 27, 2011 12:21 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மணிவண்ணன், துணை ஆட்சியர்கள் நாகராசு, தனபால். ராஜாத்தி, வடிவேலு, பி.ஆர்.ஓ., லிங்கம், ஆர். டி.ஓ., பிரியா, கலெக்டர் அலுவலக மேலாளர் சேதுராமன், குற்றவியல் மேலா ளர் குமாரபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் வரும் 15ம் தேதி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவது. முக்கிய பிரமுகர்களை அழைப்பது. மாணவ, மாணவிகளின் தேச பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்துவது. சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிப்பது. அனைத்து துறைகள் வாயிலாக நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் மணிமேகலை ஆலோசனை நடத்தினார்.


