Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிநீர் வசதி கேட்டு முற்றுகை

குடிநீர் வசதி கேட்டு முற்றுகை

குடிநீர் வசதி கேட்டு முற்றுகை

குடிநீர் வசதி கேட்டு முற்றுகை

ADDED : ஜூலை 27, 2011 12:21 AM


Google News

தேனி:தேனி ஒண்டிவீரன் காலனி பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு நகராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.தேனி நகராட்சி 12வது வார்டுடில் ஒண்டிவீரன் காலனி அமைந்துள்ளது.

விரிவாக்க பகுதியான இங்கு இதுவரை குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில் இங்கு குடிநீர் சப்ளை வழங்க நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதனால் காலனி பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் குழாய்ன்கள் அமைத்து சப்ளை வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us