/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நோயாளிகள் இறப்பு தடுப்பு ஆய்வு கூட்டம்நோயாளிகள் இறப்பு தடுப்பு ஆய்வு கூட்டம்
நோயாளிகள் இறப்பு தடுப்பு ஆய்வு கூட்டம்
நோயாளிகள் இறப்பு தடுப்பு ஆய்வு கூட்டம்
நோயாளிகள் இறப்பு தடுப்பு ஆய்வு கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் இறப்பை தடுக்கும் 'இறப்பு ஆய்வு' கூட்டம் நடந்தது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:கடந்த மூன்று மாதத்திற்கு பிறகு தற்போது இந்த கூட்டம் நடந்துள்ளது. நோயாளிகளின் இறப்பை தவிர்த்து அதனை தடுப்பது தான் இந்த கூட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் விபத்து, தற்கொலை, கொலை, பிரசவம் போன்று பல நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில் பலர் பல காரணங்களால், டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர்.இம்மருத்துவமனையில் கடந்த ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் 45 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இறப்புகள் எந்த காரணத்தினால் நடந்தது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அதற்கு தகுந்த சிகிச்சையளிக்க போதிய வசதிகள் உள்ளதா என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது போன்ற இறப்பை தடுக்க டாக்டர்கள் என்ன செய்ய வேண்டும் என அதிகாரிகளால் விளக்கப்பட்டது, என்றனர்.