Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் "அவுட்' போலீஸ் விசாரணையில் "புஸ்'

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் "அவுட்' போலீஸ் விசாரணையில் "புஸ்'

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் "அவுட்' போலீஸ் விசாரணையில் "புஸ்'

டி.என்.பி.எஸ்.சி., வினாத்தாள் "அவுட்' போலீஸ் விசாரணையில் "புஸ்'

ADDED : ஜூலை 28, 2011 01:01 AM


Google News

கடலூர் : டி.என்.பி.எஸ்.சி., குருப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த புகாரின் @பரில் நடத்திய விசாரணையில் பொய்யான தகவல் எனத் தெரிய வந்தது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த வி.ஏ.ஓ., தேர்வுக்கு முன்பே கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வினாத்தாள் கிடைத்ததாக தகவல் பரவியது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி வெளியான வி.ஏ.ஓ., தேர்வு முடிவில், பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றனர். இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே வரும் 30ம் தேதி நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குருப்-2 தேர்விற்கான வினாத்தாள் பத்திரக்கோட்டை பகுதியில் வெளியானதாக தகவல் பரவியது.



தேர்விற்கு தயாரான இளைஞர்கள் சிலர் கலெக்டரிடம் புகார் செய்தனர். கலெக்டரின் உத்தரவின் பேரில், எஸ்.பி., பகலவன் மேற்பார்வையில் நெய்வேலி டி.எஸ்.பி., மணி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், குமார், பாண்டியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பத்திரக்கோட்டை, நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், கிருஷ்ணங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் புகாரில் குறிப்பிட்ட நபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் புகாரில் கூறப்பட்ட தகவல் பொய்யானது எனத் தெரிய வந்தது. அதன் பிறகே போலீசார் நிம்மதியடைந்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us