Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/இலவச ரத்த பரிசோதனை முகாம்

இலவச ரத்த பரிசோதனை முகாம்

இலவச ரத்த பரிசோதனை முகாம்

இலவச ரத்த பரிசோதனை முகாம்

ADDED : ஜூலை 26, 2011 01:06 AM


Google News

ஸ்ரீவைகுண்டம் : ஆழ்வார்திருநகரியில் மாணவர்களுக்கான இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.ஆழ்வை ஜிடிஜி நடுநிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு டவுன் பஞ்.,தலைவர் ஆதிநாதன் தலைமை வகித்தார்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் தாசன் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் தலைமையாசிரியர் கருத்தமாயன், டவுன் பஞ்.,துணைத் தலைவர் முத்துபாண்டி மற்றும் ஜிடிஜி நடுநிலைப்பள்ளி, மீரான்யா நடுநிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ.நடுநிலைப்பள்ளி, உதுமான்யா தொடக்கப்பள்ளி, சுப்பிரமணிய பாரதி வித்யாலயா தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை நாசரேத் சமுதாய கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us