Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடியில் கோயில் கொடைவிழா

உடன்குடியில் கோயில் கொடைவிழா

உடன்குடியில் கோயில் கொடைவிழா

உடன்குடியில் கோயில் கொடைவிழா

ADDED : ஜூலை 26, 2011 01:06 AM


Google News

உடன்குடி : உடன்குடியில் இசக்கிஅம்மன் கோயில் கொடைவிழா நடக்கிறது.உடன்குடி இசக்கிஅம்மன் நகர் இசக்கிஅம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது.

இக்கோயில் வருடாந்திர விழா நேற்று மாலை கும்பாபிஷேகத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரவு நல்ல கனமழை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜையும், வில்லிசையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகமும், பகல் 12 மணி, இரவு 9 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், நாளை (27ம் தேதி) காலை 10 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், காலை 11 மணிக்கு பக்தர்கள் அனைவருக்கும் சமபந்தி போஜனமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மருதூர்கரை குளந்தக்கரை இசக்கிஅம்மன் கோயில் கொடைவிழா இன்று நடக்கிறது. காலை கும்பாபிஷேகமும், பகல் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us