Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி பகுதியில் ஓடிய 13 மினிபஸ்கள் திடீர் நிறுத்தம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவிப்பு

உடன்குடி பகுதியில் ஓடிய 13 மினிபஸ்கள் திடீர் நிறுத்தம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவிப்பு

உடன்குடி பகுதியில் ஓடிய 13 மினிபஸ்கள் திடீர் நிறுத்தம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவிப்பு

உடன்குடி பகுதியில் ஓடிய 13 மினிபஸ்கள் திடீர் நிறுத்தம் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் தவிப்பு

ADDED : ஜூலை 26, 2011 01:06 AM


Google News

உடன்குடி : உடன்குடி பகுதியில் ஓடிய 13 மினிபஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டது.

இதனால் 100க்கு மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக மினி பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடன்குடி மற்றும் அதனைச் சுற்றி சுமார் 100க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இக்கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலும், மிகப்பெரிய வாரச்சந்தையான திங்கள்கிழமை நடக்கும் சந்தையில் பொருள்கள் வாங்க உடன்குடிக்கு தான் வரவேண்டும். மேலும் மூன்று மேல்நிலைப்பள்ளி, அரசு ஆஸ்பத்திரி, கால்நடை ஆஸ்பத்திரி, மின் அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகமும் உடன்குடியில்தான் உள்ளது.



பிரசித்திப் பெற்ற குலசை முத்தாரம்மன், செட்டியாபத்து, ஐந்து வீட்டு சுவாமி கோயில், தேரிகுடியிருப்பு, கற்குவேல் அய்யனார் ஆகிய கோயில்களுக்கு வரும் பக்தர்கள் உடன்குடிக்கு வந்துதான் செல்கின்றனர். இவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வந்து செல்ல முறையான பஸ் வசதி இல்லாததால் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து வந்தனர். பொதுமக்களின் நலன் கருதி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு உடன்குடி-திருச்செந்தூர், உடன்குடி-சீருடையார்புரம், உடன்குடி-சிறுநாடார்குடியிருப்பு, உடன்குடி-மெஞ்ஞானபுரம், உடன்குடி-படுக்கப்பத்து ஆகிய ஐந்து வழித்தடங்களில் ஒரு தனியார் நிறுவனம் 13 மினி பஸ்களை இயக்கி வந்தது.



இந்த பஸ்களுக்கு உடன்குடி பஸ் ஸ்டாடின் அருகே டெப்போ செயல்பட்டு வந்தது. இதனால் சுற்றுப்புற மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் தனியார் நிறுவனம் திடீரென 13 மினி பஸ்களையும் நிறுத்திவிட்டது. டெப்போவை காலி செய்துவிட்டு பஸ்களும் மாயமாகிவிட்டன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவிட்டனர். அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு வரவேண்டும் என்றாலும் தனியார் வாகனங்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடடினயாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஐந்து வழித்தடங்களிலும் அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us