/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி : ஜூலை 31ல் தலைமையாசிரியர்கள் கழக தேர்தல்தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி : ஜூலை 31ல் தலைமையாசிரியர்கள் கழக தேர்தல்
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி : ஜூலை 31ல் தலைமையாசிரியர்கள் கழக தேர்தல்
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி : ஜூலை 31ல் தலைமையாசிரியர்கள் கழக தேர்தல்
தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி : ஜூலை 31ல் தலைமையாசிரியர்கள் கழக தேர்தல்
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழக தேர்தல் வரும் 31ம் தேதி நடக்கிறது.
இதனால் இந்த சங்கத்தின் தேர்தல் என்றால் மிகுந்த பரபரப்புடன் நடக்கும் என்று கூறப்படுகிறது. இது போன்று தான் தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த சங்கத்திற்கு நடக்கும் தேர்தல் மிகுந்த பரபரப்பை இப்போதே எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் போட்டியிடுவோர் தங்களுக்கு ஓட்டு போடுமாறு தலைமையாசிரியர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தேர்தல் குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியுமான (பொ) பெருமாள்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் தூத்துக்குடி கல்வி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டம், தூத்துக்குடி வருவாய் மாவட்டம் ஆகிய மூன்று பிரிவுகளுக்கான தேர்தல் 31.7.2011 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் தவறாறு கலந்து கொண்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு தலைமையாசிரியரும் தேர்தலில் பங்கேற்காமல் இருக்க கூடாது. ஒட்டு மொத்தமாக அனைத்து தலைமையாசிரியர்களின் வாக்குகளும் தேர்தலில் பதிவாகி இருக்க வேண்டும். இவ்வாறு பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.


