சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் அவசர ஆலோசனை
சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் அவசர ஆலோசனை
சித்த மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் : அமைச்சர் அவசர ஆலோசனை

சென்னை : சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்து விவாதிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் தலைமையில், அவசர ஆலோசனை கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
சித்தா, ஆயுர்வேத பாடத்திட்டத்திலிருந்து, அலோபதி பாடங்களை நீக்கியும், இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புகளுக்கான பெயரில் மாற்றம் செய்தும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகம் முடிவு செய்து, அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றியது.
இதை எதிர்த்து, சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவக் கல்லூரி மாணவர்கள், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
பாடத்திட்டத்தில் மாற்றம் கூடாது என, மாணவர்கள் வாதிட்டனர். பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யும் அதிகாரம் இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலுக்கு தான் உள்ளது. இப்போதுள்ள பாடத்திட்டத்தை மாற்றக் கூடாது என, பல்கலைக்கழகத்தை மத்திய கவுன்சில் எச்சரித்துள்ளது என்பதையும் மாணவர்கள் எடுத்துக் கூறினர். மாணவர்கள் தரப்பில் உள்ள நியாயத்தை இந்திய மருத்துவ முறை ஆணையர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. இதையேற்று, மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் மயில்வாகனன், பழைய பாடத்திட்டமே நீடிக்கும் என கூறியதாக மாணவர் தரப்பில் தெரிவித்தனர்.