Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்

கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்

கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்

கோவில் சொத்து அபகரிப்பு வழக்கு : தி.மு.க., பெண் கவுன்சிலர் உட்பட 7 பேர் குற்றப்பிரிவு போலீசில் சரண்

ADDED : செப் 10, 2011 01:24 AM


Google News

சேலம் :சேலத்தில், கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி தி.மு.க., பெண் கவுன்சிலர், வழக்கறிஞர்கள் உட்பட 7 பேர் நேற்று, மாநகர குற்றப்பிரிவு போலீசில் சரணடைந்தனர்.



சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் உச்சிகால பூஜை நடத்த, சுப்ரமணி என்ற பக்தர், தனக்கு சொந்தமான, 2,147 சதுர அடி கட்டடங்களை, 1907ல் தானமாக எழுதிக் கொடுத்தார். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பிலேயே உச்சிகால பூஜை நடத்தப்படும் என, 1980ல் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், டிரஸ்டி பெயரில் சவுந்திரராஜன் என்பவர், கோவிலுக்கு சொந்தமான கட்டடங்களை இடித்துவிட்டு, அங்கு, 32 கடைகள் கொண்ட மூன்றடுக்கு மாடி வணிகவளாகத்தை கட்டி, வாடகைக்கு விட்டார். அதை எதிர்த்து, ராதாகிருஷ்ணன் என்பவர், 2009ல், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.விசாரணையில், கோவில் சொத்து தொடர்பாக, விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கும்படி, சேலம் ஆர்.டி.ஓ.,வுக்கு உத்தரவிடப்பட்டது. அப்போதைய ஆர்.டி.ஓ., குழந்தைவேலு தீவிர விசாரணை நடத்தியதில், கோவில் சொத்து அபகரிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, கோவில் சொத்தை மீட்டு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர, கோவில் நிர்வாக அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதோடு, சொத்தை பராமரிக்க, நிர்வாக அலுவலரே தக்காராக நியமனம் செய்யப்பட்டார்.



ஆனால், கோவில் சொத்து தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக டிரஸ்டி பத்ரிநாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எற்கனவே சவுந்திரராஜன் மீது புகார் கொடுத்த ராதாகிருஷ்ணன், கடந்த ஜூலை 6ம் தேதி, கோவில் சொத்து அபகரிப்பு தொடர்பாக, மாநகர நிலஅபகரிப்பு மீட்டுக்குழுவில் புகார் செய்தார்.

புகாரின் பேரில், பத்ரிநாராயணன், தி.மு.க., பெண் கவுன்சிலர் சரளா குணசேகரன், சென்னகிருஷ்ணன், அனந்தகிருஷ்ணன், ஆசிக் உசேன், வழக்கறிஞர்கள் மணிவண்ணன், ரமேஷ் ஆகிய 7 பேர் மீதும், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இவ்வழக்கில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, 7 பேரும், முன்ஜாமின் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 7 பேருக்கும், 12 வார காலத்துக்கு மட்டும் இடைக்கால ஜாமின் வழங்கி, நீதிபதி சுதந்திரம் உத்தரவிட்டார். மேலும், மாநகர நிலமீட்புக்குழு போலீசில், 7 பேரும் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, கவுன்சிலர் சரளா குணசேகரன், அனந்தசுப்ரமணியம், வழக்கறிஞர்கள் ரமேஷ், மணிவண்ணன் உட்பட 7 பேரும், நேற்று சேலம் மாநகர நிலஅபகரிப்பு மீட்புக்குழுவிடம் சரணடைந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us