/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/சரக்கு பெட்டகங்களை கையாளுவதில்வஉசி., துறைமுகம் புதிய சாதனைசரக்கு பெட்டகங்களை கையாளுவதில்வஉசி., துறைமுகம் புதிய சாதனை
சரக்கு பெட்டகங்களை கையாளுவதில்வஉசி., துறைமுகம் புதிய சாதனை
சரக்கு பெட்டகங்களை கையாளுவதில்வஉசி., துறைமுகம் புதிய சாதனை
சரக்கு பெட்டகங்களை கையாளுவதில்வஉசி., துறைமுகம் புதிய சாதனை
ADDED : ஜூலை 30, 2011 01:11 AM
தூத்துக்குடி:2010-11ம் நிதியாண்டில் இதுவரை 1.5 லட்சம் டி.இ.யூ., சரக்கு
பெட்டகங்களை கையாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.
வஉசி., துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் கூறியுள்ளதாவது; இந்திய பெரிய துறைமுகங்களில் 10வது துறைமுகமாக
அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வஉசி., துறைமுகம் சரக்கு கையாளுவதில்
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. வஉசி.,
துறைமுகம் 2010-11 நிதியாண்டில் 25.73 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு
இந்திய பெரிய துறைமுகங்களில் வளர்ச்சியின் அடிப்படையில் முதலாவது
துறைமுகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-11 நிதியாண்டில் 4,67,752
டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை துறைமுகம் கையாண்டது. இந்த சாதனை அதற்கு
முந்தைய நிதியாண்டான 2009-10ல் கையாளப்பட்ட 4,39,948 டி.இ.யூ., சரக்கு
பெட்டகங்களை விட 6.32 சதவீதம் கூடுதல் ஆகும். மேலும் இந்த சாதனை மத்திய
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4,45,000 டி.இ.யூ.,களை விட 5.11
சதவீதம் கூடுதல் ஆகும். சரக்கு பெட்டகங்களின் சராசரி உற்பத்தி குறியீடு
4.49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான 2011-12ல் இன்று
வரை 1,51,116 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை கையாண்டு துறைமுகம் சாதனை
படைத்துள்ளது. இந்த சாதனை கடந்த நிதியாண்டின் இதேகால அளவில் கையாளப்பட்ட
சரக்கு பெட்டகங்களை விட 1.75 சதவீதம் கூடுதல் ஆகும். வ.உ.சி., துறைமுக
பொறுப்பு கழகம் துறைமுகத்தில் 8வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக தளமாக
மாற்றி அமைக்கும் திட்ட பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் துறைமுகத்தின்
ஆய்வில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.