/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கவுன்சலிங் புதுகையில் இன்று துவக்கம்; கலெக்டர்ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கவுன்சலிங் புதுகையில் இன்று துவக்கம்; கலெக்டர்
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கவுன்சலிங் புதுகையில் இன்று துவக்கம்; கலெக்டர்
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கவுன்சலிங் புதுகையில் இன்று துவக்கம்; கலெக்டர்
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கவுன்சலிங் புதுகையில் இன்று துவக்கம்; கலெக்டர்
புதுக்கோட்டை: புதுகை மாவட்ட அரசு, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் இன்று முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.
புதுகை கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: புதுகை மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறை கீழ் இயங்கிவரும் அரசு, நகராட்சி மற்றும் பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி பணியாற்றிவரும் ஆசிரியருக்கு பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆரம்பமாகிறது. தொட ர்ந்து 17, 19 மற்றும் 20ம் தேதிகளில் இந்த கவுன்சலிங் நடக்கிறது. பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டு விரும்பிய இடங்களை தேர்வுசெய்யலாம். இன்று காலை முதல் மதியம் வரை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் நடக்கிறது. பிற்பகல் தமிழ் பட்டதாரி ஆசிரியருக்கான கவுன்சலிங் நடக்கிறது. 17ம் தேதி காலை முதல் மதியம் வரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான கவுன்சலிங், பிற்பகல் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கான கவுன்சலிங் நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை முதல் மதியம் வரை பஞ்சாயத்து யூனியன் பகுதிக்குள் மாறுதல் கோரியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. பிற்பகல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் கோரியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை முதல் மதியம் வரை வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. பிற்பகல் வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் கோரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. பணியிடமாறுதல், பதவி உயர்வு கோரியுள்ள ஆசிரியர்கள் கவுன்சலிங் நாளன்று ஒருமணி நேரத்துக்கு முன் உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும்.


