/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம்ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம்
ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம்
ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம்
ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சிக் கூட்டம்
ADDED : செப் 07, 2011 11:57 PM
பொன்னேரி : உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதையொட்டி, துணை வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக, ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடந்தது.தமிழகத்தில், அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அக்டோபர் 1ம் தேதி துணை வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, பெயர் மாற்றம், நீக்கம் ஆகியவற்றுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மாதம் 13ம் தேதி வரை, இதற்கான மனுக்கள் பெறப்படுகின்றன.இதற்காக, ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கு, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரி சட்டசபைத் தொகுதியில் உள்ள, 225 ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம், பொன்னேரி ஆர்.டி.ஓ., கந்தசாமி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், ஓட்டுப் பதிவு அலுவலர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு, ஆர்.டி.ஓ., கந்தசாமி விளக்கமளித்தார்.
அப்போது, பொன்னேரி தாசில்தார் வேளம்மாள், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் இந்திரா ஆகியோர் உடனிருந்தார். 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பயிற்சிக் கூட்டத்தில் பங்கேற்றனர்.