Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் "மனுநீதி நாள்' : சின்னமனூர் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி

மக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் "மனுநீதி நாள்' : சின்னமனூர் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி

மக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் "மனுநீதி நாள்' : சின்னமனூர் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி

மக்கள் குறைதீர்க்க வாரம் தோறும் "மனுநீதி நாள்' : சின்னமனூர் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி

ADDED : அக் 13, 2011 09:57 PM


Google News

சின்னமனூர் : சின்னமனூர் நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளராக ஆர்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார்.

2001 ல் கவுன்சிலராக இருந்து வார்டில் நிலவிய குறைகளை தீர்த்து மேம்பாடு அடையச் செய்ததுடன், நகரின் பொதுவான வளர்ச்சிக்கும் குரல் கொடுத்து சில திட்டங்கள் கொண்டுவர காரணமாக இருந்துள்ளார். நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர் கூறியதாவது; தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும். சுகாதாரம் மேம்படுத்தப்படும். நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். அங்கன்வாடி மையங்கள் சீர்படுத்தப்பட்டு சொந்த கட்டடங்களில் இயக்கப்படும். நகராட்சி நல்வாழ்வு மையத்தில் போதுமான டாக்டர்கள் நியமிக்கப்படும். 24 மணிநேர சேவை கிடைக்கும். சீப்பாலக்கோட்டைரோடு, சொக்கநாதபுரம், பி.டி.ஆர்.,கால்வாய், அய்யனார்புரம், அய்யன்கோயில் தெரு, விஸ்வன்குளம், கீழப்பூலாநந்தபுரம் பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வாங்கிதரப்படும். மக்கள் குறைகளை தீர்க்க வாரம் ஒருமுறை குறைதீர்க்கும் நாள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். காந்திநகர்காலனி, வண்டிப்பேட்டை பகுதிகளில் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டிகள், மேடான பகுதிகளில் சின்டெக்ஸ்கள் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படும். பெரியாற்று படிக்கட்டுகள் சீரமைக்கப்படும். சிறுவர் பூங்கா, விளையாட்டு திடல், முதியோர் நடைபயிற்சிக்கு நடைபாதை அமைத்து தரப்படும். மழைகாலங்களில் நகரில் பெரும் தலைவலியாக உள்ள சீப்பாலக்கோட்டை, மெயின் ரோட்டில் கழிவுநீர் ரோட்டில் தேங்குவதை தடுக்க வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை நகராக்கப்படும். எந்த நேரமும் மக்கள் குறைகளை கூறினாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.(99427-61019)









      Our Apps Available On




      Dinamalar

      Follow us