/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வல்வில் ஓரி விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைவல்வில் ஓரி விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
வல்வில் ஓரி விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
வல்வில் ஓரி விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
வல்வில் ஓரி விழா முன்னிட்டு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
ADDED : ஜூலை 31, 2011 01:35 AM
நாமக்கல்: 'கொல்லிமலையில் நடக்கும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ம் தேதி, நாமக்கல் மாவட்ட அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது' என, கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதியில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா நடக்கிறது.
விழாவில் முக்கிய நாளான ஆகஸ்ட் 3ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.அன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 27ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான ஆகஸ்ட் 3ம் தேதி, மாவட்டத்தில் உள்ள கருவூலங்கம், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புள்ள அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


