/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு ரூ.92 ஆயிரத்து 300 அபராதம்ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு ரூ.92 ஆயிரத்து 300 அபராதம்
ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு ரூ.92 ஆயிரத்து 300 அபராதம்
ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு ரூ.92 ஆயிரத்து 300 அபராதம்
ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு ரூ.92 ஆயிரத்து 300 அபராதம்
ADDED : ஆக 06, 2011 01:55 AM
திருநெல்வேலி : நெல்லையில் ஓவர் லோடு லாரி டிரைவர்களுக்கு 92 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டது.நெல்லை அருகேயுள்ள தாழைக்குளம், தளபதி சமுத்திரம் மற்றும் நான்குநேரி பைபாஸ் ரோட்டில் அந்தந்த பகுதி போலீசார் வாகனச்சோதனை நடத்தினர்.
சோதனையில் அரசு அனுமதித்த எடையை விட அதிக அளவில் லோடு ஏற்றி வந்த லாரிடிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு நெல்லை தலைமை நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி நசீர் அகமது விசாரித்தார்.குற்றம்சாட்டப்பட்ட லாரி டிரைவர்களான குமரி மாவட்டத்தை சேர்ந்த டார்சன்(25)க்கு 25 ஆயிரத்து 600 ரூபாயும், மண்டைக்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார்(35) 21 ஆயிரம் ரூபாயும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம்(40) 18 ஆயிரத்து 200 ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவந்தி(38) 13 ஆயிரம் ரூபாயும், மைசூரை சேர்ந்த குழந்தைசாமி(29) 14 ஆயிரத்து 500 ரூபாய் என மொத்தம் 92 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.