/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிறந்த குழந்தைக்கு குடல் அடைப்பு சரிசெய்து பொள்ளாச்சி டாக்டர்கள் சாதனைபிறந்த குழந்தைக்கு குடல் அடைப்பு சரிசெய்து பொள்ளாச்சி டாக்டர்கள் சாதனை
பிறந்த குழந்தைக்கு குடல் அடைப்பு சரிசெய்து பொள்ளாச்சி டாக்டர்கள் சாதனை
பிறந்த குழந்தைக்கு குடல் அடைப்பு சரிசெய்து பொள்ளாச்சி டாக்டர்கள் சாதனை
பிறந்த குழந்தைக்கு குடல் அடைப்பு சரிசெய்து பொள்ளாச்சி டாக்டர்கள் சாதனை
ADDED : ஜூலை 21, 2011 12:38 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து இரண்டு வாரங்களான ஆண் குழந்தைக்கு குடல் அடைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பொள் ளாச்சி அரசு மருத்துவமனை குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணன் கூறியதாவது: பிறந்து இரண்டு வாரங்களான ஆண் குழந்தைக்கு குடல் அடைப்பு ஏற்பட்டிருந்தது. பிறந்த ஒரு வாரத்திலிருந்து குழந்தை குடித்த பால் வாய்வழியாக வெளியேறியது. இப்பிரச்னை 'அல்ட்ரா சவுன்ட்' ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டது.பிறவியில் ஏற்பட்ட இக்கோளாறை சரி செய்ய முடியும். இப் பிரச்னை ஏற்படும் குழந்தைகளை; கோவை அரசு மருத்துவமனைக்கு அல்லது தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்வர். ஆனால் இதை சவாலாக எடுத்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்தோம் என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில், குழந்தை நல அறுவை சிகிச்சை நிபுணர் கண்ணன் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். குழந்தை பொதுநல டாக்டர் ராஜா, மயக்க மருந்து நிபுணர் கந்தசாமி, செந்தில்நாத் ஆகியோர் கொண்ட குழு ஈடுபட்டு அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். தற்போது குழந்தை நலமாக உள்ளது.


