ADDED : செப் 28, 2011 11:50 PM
சாயல்குடி : ''கடலாடி ஒன்றிய 21வது வார்டில் அனைத்து வசதிகளும் செய்துதருவேன்,'' என வேட்பாளர் பி.லட்சுமி கூறினார்.கடலாடி ஒன்றியம் 21 வார்டுக்கு போட்டியிட பி.
லட்சுமி, உதவி தேர்தல் அலுவலர் கணேசனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். பின்னர் இவர் கூறியதாவது: எஸ்.தரைக்குடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டட வசதிகள் செய்து தருவேன். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவும் பாடுபவேன். மாணவர்கள் விடுதி வசதி ஏற்படுத்த பாடுபடுவேன். கால்நடை மருந்தகம் அமைப்பதற்கும், செவல்பட்டி, எஸ். தரைக்குடி, எஸ்.டி.சேதுராஜபுரம், ஆர்.சி.புரம், வாலம்பட்டி, வி.முத்துராமலிங்கபுரம் மக்களுக்காக கூடுதல் பஸ் இயக்க முயற்சிப்பேன். தி.மு.க., தலைவர் கருணாநிதி வழியில் என்னை முழுமையாக அர்ப்பணித்து பாடுபடுவேன், என்றார்.தி.மு.க., கிளை செயலாளர் ஹைதர் அலி(எஸ்.தரைக்குடி), எம்.மாரியப்பன்(செவல்பட்டி), செய்யது, சம்சு, டி.கரிசல்குளம் ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் ஆண்டி, மூக்கையா உடனிருந்தனர்.