/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தேவை இரு வழிசாலைநரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தேவை இரு வழிசாலை
நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தேவை இரு வழிசாலை
நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தேவை இரு வழிசாலை
நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் தேவை இரு வழிசாலை
ADDED : செப் 24, 2011 10:05 PM
நரிக்குடி : நரிக்குடி திருப்புவனம் ரோட்டை இரு வழி சாலையாக மாற்ற வேண்டும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி திருப்புவனம் ரோடு போடப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில், தற்போது ரோட்டை முழுமையாகப் போடமால் சேதமடைந்த ரோட்டை மட்டும் போட்டுள்ளனர். எதிரெதிரே வரும் வாகனங்கள் விலகி செல்ல முடியவில்லை. இருபுறமும் பள்ளங்கள், முட்புதர்களாக உள்ளன. மதுரை மற்றும் திருப்புவனத்திலிருந்து வரும் பஸ்கள் மட்டுமே இவ்வழித்தடத்தில் வேறு வழியின்றி வருகின்றன. மற்ற வாகனங்கள் வருவதில்லை. திருப்புவனத்திலிருந்து நரிக்குடி வரை 34 கி.மீ., தூரத்தை பஸ்சில் கடக்க இரண்டு மணி நேரமாகிறது. நரிக்குடியிலிருந்து திருப்புவனம் வழியாக மதுரை செல்ல 52கி.மீ., தூரம் பயண கட்டணம், 20 ரூபாய்க்குள் முடிந்து விடும். ரோடு சரியில்லாமல் மக்கள் அனைவரும், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு செல்ல 90 கி.மீ., தூரம் ஆவதுடன் பயணக் கட்டணமும் 30 ரூபாய் ஆகிறது. பயண தூரம் அதிகரிப்பதுடன் பணம், நேரமும் அதிக செலவாகிறது.வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்க, விளை பொருள்களை விற்பனை செய்வதற்கு, லோடு வேன்களில் செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. நரிக்குடி திருப்புவனம் ரோடு இருவழி சாலையாக போட பட்டால், 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


