புதிதாக 77 வருவாய் கோட்ட நூலகங்கள்
புதிதாக 77 வருவாய் கோட்ட நூலகங்கள்
புதிதாக 77 வருவாய் கோட்ட நூலகங்கள்
ADDED : செப் 07, 2011 11:51 PM
தேனி: வருவாய் கோட்ட அளவில், புதிதாக 77 வருவாய் கோட்ட நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழக அரசு சார்பில், 2010-11ம் ஆண்டிற்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நூலகத்துறையில், 77 வருவாய் கோட்டங்களில், வருவாய் கோட்ட நூலகங்கள் விரைவில் கட்டப்பட உள்ளன. நபார்டு நிதி உதவியுடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வருவாய் கோட்ட நூலகங்களின் கட்டுப்பாட்டில், தாலுகா நூலகங்களும், கிராம நூலகங்களும் செயல்படும். இது தவிர, புதிய புத்தகங்கள் வாங்குவதற்கு, 25 கோடி ரூபாய், புதிய நூலக கட்டடங்களுக்கு 25 கோடி ரூபாய், நூலக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும், செலவினங்களுக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 26 மாவட்ட நூலக அலுவலர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.