ADDED : ஜூலை 26, 2011 11:20 PM
திட்டக்குடி : பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் திறனறிதல் பயிற்சி முகாம் துவங்கியது.
பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திறனறிதல் பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர். பெண்ணாடம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு நடந்த முகாமில் ஓவியம் வரைதல், கையெழுத்து போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ்ப் பாடல்கள் ஒப்புவித்தல், நினைவாற்றல், தனித்திறன் போட்டிகள் நடந்தது. மாணவர்கள் ஆர்வத்துடன் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பயனற்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கிய ஓவியங்கள், 'சிங்கிள் ஸ்ட்ரோக்' ஓவியங்கள் முதலியவை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.