Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பெருநகருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடுகிராம சபையில் எம்.பி., அறிவிப்பு

பெருநகருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடுகிராம சபையில் எம்.பி., அறிவிப்பு

பெருநகருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடுகிராம சபையில் எம்.பி., அறிவிப்பு

பெருநகருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடுகிராம சபையில் எம்.பி., அறிவிப்பு

ADDED : ஜூலை 24, 2011 02:31 AM


Google News
காஞ்சிபுரம்:''நரிக்குறவர்களின், துப்பாக்கி உரிமையை புதுப்பித்து தர, நடவடிக்கை எடுப்பேன்,'' என, காஞ்சிபுரம் எம்.பி., விஸ்வநாதன் உறுதி அளித்தார்.

உத்திரமேரூர் அடுத்த பெருநகரில், நேற்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, 'கிராம சபைக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் கிராமங்களில் என்ன நடக்கிறது, என்பது அரசுக்கு தெரிய வரும். இக்கூட்டத்தில், நரிக்குறவர்கள் உட்பட, அனைத்து ஜாதியினரும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.பெருநகர் பொதுமக்கள் பேசும் போது,'ரேஷன் கடைக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும். போலீஸ் நிலையம் அருகே, பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்' என்றனர். அதற்கு தொகுதி நிதியிலிருந்து, ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்குவதாக, எம்.பி., அறிவித்தார்.

நரிக்குறவர்கள் சிலர் பேசும் போது,'' எங்களில் சிலருக்கு மட்டும் ரேஷன் கார்டு கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். வேட்டையாடி பிழைத்து வரும் நாங்கள் துப்பாக்கி வைத்துள்ளோம். அவற்றின் உரிமையை புதுப்பித்து தராமல், அதிகாரிகள் காலம் தாழ்த்தி தருகின்றனர். துப்பாக்கி உரிமத்தை புதுப்பித்து தர வேண்டும்,'' என்றனர்.'கிராம மக்களின் கோரிக்கைகள் மற்றும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, 29ம் தேதி, கலெக்டரிடம் நேரில் கூறி, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன்' என்று எம்.பி., உறுதி அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us