/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்து தவிர்க்க விழிப்புணர்வு "சிடி' படமெடுத்த போலீஸ் : ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டம்விபத்து தவிர்க்க விழிப்புணர்வு "சிடி' படமெடுத்த போலீஸ் : ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டம்
விபத்து தவிர்க்க விழிப்புணர்வு "சிடி' படமெடுத்த போலீஸ் : ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டம்
விபத்து தவிர்க்க விழிப்புணர்வு "சிடி' படமெடுத்த போலீஸ் : ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டம்
விபத்து தவிர்க்க விழிப்புணர்வு "சிடி' படமெடுத்த போலீஸ் : ஒரு லட்சம் பேருக்கு வழங்க திட்டம்
ADDED : அக் 15, 2011 02:05 AM
கோவை : 'போக்குவரத்து போலீசார் என்றாலே, வாகன சோதனை நடத்தி 'வசூல் வேட்டையில்' ஈடுபடுபவர்கள்' என்ற எண்ணம், மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது.
அந்த கறையை அழிக்கும் முயற்சியாக, 'எங்களுக்கும் சமூக அக்கறையுண்டு...' என்பதை செயல்வடிவத்தில் நிரூபித்துள்ளனர், போக்குவரத்து போலீசார். ஆம், சாலை விபத்தை தவிர்ப்பது குறித்து 45 நிமிட குறும்படம் தயாரித்துள்ள போலீசார், ஒரு லட்சம் பிரதிகளை மக்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழக சாலைகளில் நிகழும் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அதிவேகம், குடி போதை, சாலை விதிகளை மீறுதல், மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதைத்தடுக்க, சாலை விதிகளை மீறுவோரை பிடித்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்; அபராதம் செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடுகிறதே தவிர விபத்துகளும், விதிமீறல்களும் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம், சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளிடம் இல்லாதது. எனவே, சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி போக்குவரத்து போலீசார் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றனர். 45 நிமிட குறும்படம்: 'சாலை விதிகள் நமது உயிரை காப்பவை; அவற்றை கடைபிடிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக 45 நிமிட குறும்படத்தை அவிநாசி போக்குவரத்து போலீசார் தயாரித்துள்ளனர்.சாலை விதிகளை மீறும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவது, சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து, நெரிசல் ஏற்படுவது, பள்ளி வயது சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று போலீசாரிடம் பிடிபடுவது போன்ற காட்சிகள் குறும்படத்தில் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளன. காட்சி அமைப்பில் போலீசார், பொதுமக்கள், பஸ் - லாரி டிரைவர்கள் என, பலரும் நடித்துள்ளனர். அவிநாசி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேகர் வசனம், பாடல் எழுதி, அவரும் நடித்துள்ளார். திருப்பூர் எஸ்.பி., பாலகிருஷ்ணனின் துவக்கவுரையுடன் தொடங்கும் குறும்படம் 1500 'சிடி'களாக பதிவெடுக்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது. இந்த 'சிடி' வெளியீடு மற்றும் சாலை விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னியபெருமாள், டி.ஐ.ஜி., பாலநாகதேவி, எஸ்.பி., பாலகிருஷ்ணன் ஆகியோர் போலீசாரின் முயற்சியை பாராட்டினர். மொழி பெயர்க்க திட்டம்: விழிப்புணர்வு 'சிடி'யை ஒரு லட்சம் பிரதிகள் எடுத்து மாநிலம் முழுவதும் வினியோகிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளிலும் 'டப்பிங்' செய்வதற்கான முயற்சிகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். அவிநாசி போலீஸ் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சேகர் கூறியதாவது: நாங்கள் தயாரித்துள்ள குறும்படத்தை சினிமா தியேட்டர், பள்ளி, கல்லூரியில் திரையிட்டு பல ஆயிரம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்; 40 ஆயிரம் பேருக்கு துண்டு பிரசுரம் வினியோகித்துள்ளோம். 'டிரைவிங் லைசென்ஸ்' இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டோருக்கு லைசென்ஸ் பெறுவதற்கான 'எல்.எல்.ஆர்.,' விண்ணப்பம் வினியோகித்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் தொலைதூர வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாக முகாம்களை நடத்தி வருகிறோம். விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையை நடப்பாண்டில் வெகுவாக குறைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இவ்வாறு, தெரிவித்தார்.


