/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு தீ வைப்புஉடன்குடி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு தீ வைப்பு
உடன்குடி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு தீ வைப்பு
உடன்குடி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு தீ வைப்பு
உடன்குடி டவுன் பஞ்., அலுவலகத்துக்கு தீ வைப்பு
ADDED : ஆக 15, 2011 01:14 AM
உடன்குடி : உடன்குடி டவுன் பஞ்.,ல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதில் துணை தலைவர் இருக்கை மட்டும் குறி வை த்து தீ எரிந்ததால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இச்சம்பவம் நாசவே லை காரணமாக தீ எரிந்ததா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.றார்.உடன்குடி டவுன் பஞ்., உடன்குடி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் உடன்குடி பஞ்.,தலைவர் சாகுல்ஹமீர், துணை தலைவர் ஜான்பாஸ்கர், நிர்வாக அதிகாரி தேவராஜ் மற்றும் சிலர் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். அன்று இரவு பணிகளை முடித்து கொண்டு அலுவலகத்தை மூடிவிட்டு சென்றனர். நேற்று விடுமுறை என்பதால் பஞ்.,அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.இந்நிலையில் நேற்று இரவு அலுவலகத்தின் ஒரு மூலையில் இருந்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட ஆட்டோ டிரைவர்கள் பஞ்.,நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு தலைவர் சாகுல்ஹமீர், துணை தலைவர், நிர்வாக அதிகாரி தேவராஜ் ஆகியோர் விரைந்து வந்தனர். அங்கு அலுவலகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அக்கம்பக்கத்தினர், ஊழியர்கள் என பலரும் சேர்ந்து ஒரு வழியாக தீயை அணைத்தனர். இதில் துணை தலைவர் இருக்கை முழுவதும் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. சம்பவம் குறித்து உடன்குடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் உட்பட பலரும் ஆய்வு மேற்கொண்டனர்.


