/உள்ளூர் செய்திகள்/திருச்சி/செருப்பில் கஞ்சா கடத்தல்:2கைதிகள் மீது வழக்குசெருப்பில் கஞ்சா கடத்தல்:2கைதிகள் மீது வழக்கு
செருப்பில் கஞ்சா கடத்தல்:2கைதிகள் மீது வழக்கு
செருப்பில் கஞ்சா கடத்தல்:2கைதிகள் மீது வழக்கு
செருப்பில் கஞ்சா கடத்தல்:2கைதிகள் மீது வழக்கு
ADDED : ஜூலை 15, 2011 12:05 AM
திருச்சி: செருப்பில் கஞ்சா வைத்து திருச்சி மத்திய சிறைக்குள் கடத்த முயன்ற இரு கைதிகள் மீது கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் செல்வமுத்து மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (39). இவர் திருட்டு வழக்கில் கைதாகி, தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த தெய்வசிகாமணியும் (28) வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதற்காக போலீஸார் பாதுகாப்புடன் அவர்களை பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும் நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். சிறையின் உள்ளே செல்லும் முன் கைதிகள் இருவரிடமும் சிறைத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கைதிகள் தெய்வசிகாமணி, சரவணன் ஆகிய இருவரது செருப்புகளின் கீழும் தலா 55 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த 110 கிராம் கஞ்சாவை சிறைத்துறையினர் பறிமுதல் செய்து, இதுகுறித்து கே.கே.நகர் போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.