/உள்ளூர் செய்திகள்/மதுரை/குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு தே.மு.தி.க.,வேட்பாளர் வெற்றிவேல்குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு தே.மு.தி.க.,வேட்பாளர் வெற்றிவேல்
குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு தே.மு.தி.க.,வேட்பாளர் வெற்றிவேல்
குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு தே.மு.தி.க.,வேட்பாளர் வெற்றிவேல்
குடிநீர், பாதாளச்சாக்கடை இணைப்பு தே.மு.தி.க.,வேட்பாளர் வெற்றிவேல்
ADDED : அக் 06, 2011 04:13 AM
மதுரை : ''குடிநீர் குழாய், பாதாளச்சாக்கடை இணைப்பு முழுமையாக
நிறைவேற்றப்படும்,'' என மதுரை மாநகராட்சி 26 வது வார்டு (பரசுராமன்பட்டி)
தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.வெற்றிவேல் கூறினார்.
அவர் கூறியதாவது:
மகாலட்சுமி நகரில் தடைபட்டுள்ள பாதாளச்சாக்கடை இணைக்கும் பணியை முழுமையாக
நிறைவேற்றுவேன். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு
வழங்கப்படும். மகாலட்சுமி நகர், பரசுராமன்பட்டி இடையே பஸ் ஸ்டாப்,
நிழற்குடை அமைக்கப்படும். பரசுராமன்பட்டி கண்மாய்க்கரை, சிலோன்காலனி
ஆற்றுக்கால்கரை மக்களுக்கு பட்டா கிடைக்க, கான்கிரீட் வீடுகள் அமைக்க
வலியுறுத்துவேன். சிலோன்காலனி, பரசுராமன்பட்டியில் கழிப்பறை, குளியலறை
அமைக்கப்படும். பரசுராமன்பட்டி ஊரணியை சுற்றி பாதுகாப்பு வளையம், சிமென்ட்
சிலாப் ரோடு, நடைபயற்சி மையம் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன்.
துப்புரவு பணியாளர்களுக்கு கான்கிரீட் வீடுகள், பல ஆண்டுகள் கிடப்பில் உள்ள
சாந்திநகர் முதல் தெருவில் தார்ரோடு அமைக்கப்படும்.பரசுராமன்பட்டி கண்மாயை
சீரமைத்து தண்ணீர் தேக்கி, கோயில் விழாக்களின் போது முளைப்பாரி கரைத்திட
ஏற்பாடு செய்வேன். கங்காநகர், ராமசாமி நாயுடு நகர், சீதாலட்சுமி நகரில்
மழைநீர் தேங்காமல் தடுக்க கண்மாயைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
மகாலட்சுமிநகர், பரசுராமன்பட்டி பாலங்கள் அருகே நிரந்தர ஆட்டோ ஸ்டாண்ட்கள்
அமைக்க வலியுறுத்துவேன் என்றார்.


