ADDED : செப் 25, 2011 01:41 AM
திண்டிவனம்:புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தீவனூர் பெருமாள்
கோவிலில் சிறப்பு வழிபாடு, வீதியுலா நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூரில்
ஆதிநாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை
முன்னிட்டு நேற்று காலை சிறப்பு ஹோமம் நடந்தது.
மூலவருக்கு அபிஷேகம்,
தீபாராதனை நடந்தது.மாலை 7 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்
பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், சேஷ வாகனத்தில் வீதியுலா வந்து
அருள்பாலித்தார். பூஜைகளை ராமானுஜதாசர் செய்தார். விழா ஏற்பாடுகளை
பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.