ADDED : ஆக 17, 2011 01:36 AM
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு உயர்நிலைப்பள்ளியில் இலவச சட்ட உதவி மற்றும் கல்வியறிவு முகாம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்தது.
வேதாரண்யம் மாஜிஸ்திரேட் சொர்ணகுமார் தலைமை வகித்து பள்ளி மாணவ மாணவியருக்கான சட்டக்கல்வி அறிவு, குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்கள் அதன் பயன்பாடு பற்றியும் பேசினார்.தலைமையாசிரியர் தமிழ்செல்வன் வரவேற்றார். அரசு வக்கீல் சுப்பையன், வக்கீல்கள் அரிகிருஷ்ணன், மாதவன், பாலசுப்பிரமணியன், சபாரத்தினம், சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியார் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்