/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊழலுக்கு எதிராக நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுஊழலுக்கு எதிராக நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
ஊழலுக்கு எதிராக நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
ஊழலுக்கு எதிராக நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
ஊழலுக்கு எதிராக நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது
ADDED : செப் 17, 2011 09:45 PM
திண்டுக்கல் : ''நாட்டில் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது,'' என அகில இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் அருணாராய் கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:நாட்டில் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. அன்னா ஹசாரே ஜனலோக்பால் மசோதா ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். மத்தியஅரசின் லோக்பால் மசோதாவால் ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது. குறைபாடுகளை களைந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முதல் கடை நிலை ஊழியர்கள், தொண்டு நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்களும் இதில் சேர்க்கப்பட வேண்டும். இதை மொத்தமாக விசாரிக்காமல், தனித்தனி அமைப்புகள் விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் ஊழல் புகார்களை அளிப்பதற்கு தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும், என்றார்.