/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பள்ளியில் இணையதளம் துவக்கம் : மாணவர்களிடம் கம்ப்யூட்டர் ஆர்வம் வளர்க்க முடிவுஅரசு பள்ளியில் இணையதளம் துவக்கம் : மாணவர்களிடம் கம்ப்யூட்டர் ஆர்வம் வளர்க்க முடிவு
அரசு பள்ளியில் இணையதளம் துவக்கம் : மாணவர்களிடம் கம்ப்யூட்டர் ஆர்வம் வளர்க்க முடிவு
அரசு பள்ளியில் இணையதளம் துவக்கம் : மாணவர்களிடம் கம்ப்யூட்டர் ஆர்வம் வளர்க்க முடிவு
அரசு பள்ளியில் இணையதளம் துவக்கம் : மாணவர்களிடம் கம்ப்யூட்டர் ஆர்வம் வளர்க்க முடிவு
ADDED : செப் 16, 2011 09:57 PM
ஆனைமலை : அரசு பள்ளியில் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தாலுகா ஆனைமலை ஒன்றியத்தில் பொங்காளியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 243 மாணவர்கள் படித்து வருகின்றனர். நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம், யோகா பயிற்சி, அபாகஸ் பயிற்சி, மாதம் ஒருமுறை பொது அறிவுப்போட்டிகள், மாணவர் நல கருத்தரங்கம், பள்ளியில் நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களை சக மாணவர்களே பாராட்டி பரிசு வழங்குதல், சிறுசேமிப்பு திட்டம் போன்றவை இப்பள்ளியின் சிறப்பம்சங்களாக உள்ளன. கடந்த ஆண்டு மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் இன்ஸ்பயர் விருது இப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி பெற்றுள்ளார். தற்போது இப்பள்ளியில் இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளியங்கிரி கூறியதாவது: பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர்கள் செயல்பாடு குறித்தும் இணையதளம் மூலம் வெளியிடப்படும். பள்ளி செயல்பாடுகள் அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் ஆர்வத்தை வளர்க்கவும், புதிய படைப்புகளை மாணவர்கள் உருவாக்குவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் ஐ.டி.,யும் முன்மாதிரியாக தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு பயன் கிடைத்தால் மற்ற மாணவர்களுக்கும் தொடங்குவது குறித்தும் முடிவெடுக்கப்படும். அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன்வரவேண்டும். இதற்கான முயற்சியாக இது போன்ற திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம் என்றார். பொது அறிவு மாத இதழ்: பள்ளியின் தலைமை ஆசிரியர் நடத்தும் கல்வி அறக்கட்டளை மூலம் 'மைத்துளி' என்ற பொது அறிவு மாத இதழ் மாணவர்களுக்காக வெளியிடப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பொது அறிவு உள்ளிட்டவையும், பத்திரிகைகளில் வெளிவரும் முக்கியமான நிகழ்வுகளும் இடம்பெற்றிருக்கும். மாத இதழ் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு பள்ளிக்கும் 15 இதழ் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.