/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தே.மு.தி.க., விஜயகாந்த் பிறந்த நாள் விழாதே.மு.தி.க., விஜயகாந்த் பிறந்த நாள் விழா
தே.மு.தி.க., விஜயகாந்த் பிறந்த நாள் விழா
தே.மு.தி.க., விஜயகாந்த் பிறந்த நாள் விழா
தே.மு.தி.க., விஜயகாந்த் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 26, 2011 11:22 PM
முதுகுளத்தூர் : தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி முதுகுளத்தூரில் செந்தில் தலைமையில் மக்களுக்கு இனிப்பு வழங்கபட்டது. கோயில்கள், பள்ளிவாசல், சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. மாவட்ட ஊனமுற்றோர் பிரிவு மாவட்ட செயலாளர் சீனிவாசன், தே.மு.தி.க., ஒன்றிய முன்னாள் செயலாளர் முத்துராமலிங்கம், வக்கீல் இளங்கோ, நகர இளைஞரணி செயலாளர் மணிகண்டன், நகர் கேப்டன் மன்ற பொறுப்பாளர் மூர்த்தி கலந்து கொண்டனர்.
* முதுகுளத்தூரில் நகர தே.மு.தி.க., சார்பில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கான தொழிற்பயிற்சி பள்ளியில் அன்னதானம் வழங்கபட்டது. நகர செயலாளர் இளமாறன், ஒன்றிய துணை செயலாளர் வில்வதுரை, மாற்று திறனாளிகள் மாவட்ட செயலாளர் சீனிவாசன், நகர துணை செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் திரவியம், கதிரேசன், கண்ணுச்சாமி, கர்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* கடலாடியில் மாவட்ட செயலாளர் ஜின்னா தலைமையிலும், ஒன்றிய செயலாளர் நாராயணமூர்த்தி முன்னிலையிலும் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒன்றிய பொருளாளர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முருகன், இளைஞரணி செயலாளர் கணேசன், கடலாடி நகர செயலாளர் லிங்கநாதன், ஒன்றிய அவைத்தலைவர் முருகலிங்கபாண்டியன் கலந்து கொண்டனர்.
* தொண்டி அன்பாலயா மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.ராமநாதபுரம்: மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையில், அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் முன்னிலை வகித்தார். கேப்டன் மன்ற செயலாளர் இப்ராகீம், துணை செயலாளர் செயலாளர் நியூட்டன், ஒன்றிய அவை தலைவர் அருணகிரி, ஒன்றிய துணை செயலாளர் விஜயகுமார், நகர் செயலாளர் சார்லஸ், உச்சிப்புளி நகர் செயலாளர் நாகூர் கனி, மகளிர் அணி சித்திரை வள்ளி, கலா கலந்து கொண்டனர். மாவட்ட துணை செயலாளர் நாகூர் கனி நன்றி தெரிவித்தார்.


