ADDED : ஆக 23, 2011 11:27 PM
திருப்பூர் : சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மற்றும் கனவு அமைப்பு சார்பில், ஊழல்
எதிர்ப்பும், சமூக நீதியும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
சுப்ரபாரதி மணியன் எழுதிய மனக்குகை ஓவியங்கள் என்ற நூலை, மொழிப்போர் தியாகி
பெரியசாமி வெளியிட, பாண்டியன் நகர் தாய்த்தமிழ் பள்ளியை சேர்ந்த
முத்துசாமி, வேளிறையன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.இ.கம்யூ., மாவட்ட செயலாளர்
ரவி, கல்வி மேம்பாட்டு அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி
உள்ளிட்டோர் சிறப்புரை வழங்கினர். சென்ட்ரல் லயன்ஸ் கிளப் தலைவர்
பொன்னுசாமி, செயலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.