Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கரூர் வைசியா வங்கியின் 386வது கிளை நேற்று துவக்கம்

கரூர் வைசியா வங்கியின் 386வது கிளை நேற்று துவக்கம்

கரூர் வைசியா வங்கியின் 386வது கிளை நேற்று துவக்கம்

கரூர் வைசியா வங்கியின் 386வது கிளை நேற்று துவக்கம்

ADDED : செப் 17, 2011 11:24 PM


Google News

சென்னை: கரூர் வைசியா வங்கி, ஒரே நாளில் இந்தியா முழுவதும் பத்து கிளைகளையும், சென்னையில் 386வது கிளையையும் நேற்று துவங்கியது.



கரூரில், 1916 ம் ஆண்டு ஆதி கிருஷ்ண செட்டியார் மற்றும் எம்.ஏ.

வெங்கட்ராம செட்டியாரும் இணைந்து, ஒரு லட்ச ரூபாய் முதலுடன் துவங்கப்பட்டு, இன்று இந்தியா முழுவதும் 386 கிளைகளுடன் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்கிறது. சென்னை சைதாப்பேட்டையில், கரூர் வைசியா வங்கியின் 386வது கிளையை, வேளாங்கண்ணி கல்வி குழுமத்தின் தலைவர் தேவராஜ் நேற்று திறந்து வைத்தார். கர்நாடக, இந்துஸ்தானி பின்னணி பாடகி, கலைமாமணி அனுராதா ஸ்ரீராம் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார். சென்னை மருந்தாளுனர் சங்க செயலர் நாத மூர்த்தி, வங்கியின் 583வது ஏ.டி.எம்., சேவை மையத்தை துவக்கி வைத்தார். சைதாப்பேட்டை வங்கிகிளை, வாரம் ஏழு நாட்கள் செயல்படும். மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை வங்கியின் மூலம் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பு. சைதாப்பேட்டை கிளை துவங்கியதும், வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி செலுத்துவது, வங்கியில் புதிய கணக்கு துவக்குவது போன்ற செயல்களில் உற்சாகத்துடனும், ஆர்வமுடனும் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், கரூர் வைசியா வங்கியின் மக்கள் தொடர்பு அதிகாரி நாகை முகுந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சைதாப் பேட்டை வங்கி கிளை மேலாளர் விவேக் ஆனந்த், துணை பொது மேலாளர் சங்கர வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us