/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடைகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ADDED : செப் 03, 2011 02:43 AM
குற்றாலம்:குற்றால அருவிகளில் நேற்று இரவு திடீரென வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.கடந்த இரண்டு
தினங்களாக ரம்ஜான், விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால்
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து
அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளா,
தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.நேற்று காலை
முதலே குற்றாலம் பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. மாலையில் மழை
தீவிரமடைந்ததையடுத்து குற்றால அருவிகளில் இரவு திடீர் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயினருவியில் குளிக்க தடை
விதிக்கப்பட்டது.