/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கயத்தாறில் கோயிலுக்கு வந்தவரிடம் லேப்டாப் திருட்டுகயத்தாறில் கோயிலுக்கு வந்தவரிடம் லேப்டாப் திருட்டு
கயத்தாறில் கோயிலுக்கு வந்தவரிடம் லேப்டாப் திருட்டு
கயத்தாறில் கோயிலுக்கு வந்தவரிடம் லேப்டாப் திருட்டு
கயத்தாறில் கோயிலுக்கு வந்தவரிடம் லேப்டாப் திருட்டு
ADDED : செப் 01, 2011 02:03 AM
கயத்தாறு : கயத்தாறில் சாமிகும்பிட வந்தவரிடம் லேப்டாப் மற்றும் செல்போனை திருடியவரை கயத்தாறு போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்திரமவுலி(60). இவர் சென்னையில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் கயத்தாறு அகிலாண்டஈஸ்வரி அம்மன் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு ஓய்வு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். கண்விழித்து பார்த்த போது இவரது லேப்டாப் மற்றும் செல்போனை காணவில்லை. உடனே கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். கயத்தாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது வழக்கு பதிவு செய்து லேப்டாப் மற்றும் செல்போன் திருடியவரை தேடி வருகின்றனர்.