/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பஸ் நிலையத்தில் பர்ஸ் அபேஸ் : இரண்டு பெண்கள் கைதுபஸ் நிலையத்தில் பர்ஸ் அபேஸ் : இரண்டு பெண்கள் கைது
பஸ் நிலையத்தில் பர்ஸ் அபேஸ் : இரண்டு பெண்கள் கைது
பஸ் நிலையத்தில் பர்ஸ் அபேஸ் : இரண்டு பெண்கள் கைது
பஸ் நிலையத்தில் பர்ஸ் அபேஸ் : இரண்டு பெண்கள் கைது
ADDED : ஜூலை 15, 2011 12:56 AM
பண்ருட்டி : பண்ருட்டியில் பெண்ணிடம் பர்சை திருடிய இரு பெண்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி அம்பேத்கர் நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி தில்ஷத், 35. இவர் நேற்று காலை 9 மணியளவில் சேமக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்ல பண்ருட்டி பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கையில் பணம் வைத்திருந்த பர்சை ஒரு பெண் திருடி மற்றொரு பெண்ணிடம் கொடுத்தார். இதனை பக்கத்தில் இருந்து கவனித்த பயணி ஒருவர் சத்தம் போட்டு மணிபர்சை திருடிய இரு பெண்களையும் கையும் களவுமாக பிடித்து பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து பண்ருட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து மணிபர்சை திருடிய சமயபுரத்தை சேர்ந்த முத்தம்மா, 25, பார்வதி, 28, இருவரை கைது செய்தனர்.