/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் ரூ.1.9 கோடி உண்டியல் வசூல்ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் ரூ.1.9 கோடி உண்டியல் வசூல்
ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் ரூ.1.9 கோடி உண்டியல் வசூல்
ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் ரூ.1.9 கோடி உண்டியல் வசூல்
ஆடி கிருத்திகை: முருகன் கோவிலில் ரூ.1.9 கோடி உண்டியல் வசூல்
ADDED : ஆக 01, 2011 01:48 AM
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்த, ஆடிக் கிருத்திகைத் திருவிழாவில், ஐந்து நாட்களில் ஒரு கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 475 ரூபாய் ரொக்கம், உண்டியல் மூலம் வசூலானது.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை மற்றும் 3 நாள் தெப்பத் திருவிழா, ஜூலை 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடந்தது.
விழாவில், பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைக்காக ரொக்கம், தங்கம், வெள்ளிப் பொருட்களை, காணிக்கையாக உண்டியலில் செலுத்தினர்.திருவிழா நடைபெற்ற ஐந்து நாட்கள், உண்டியல் வசூல் எண்ணப்பட்டது. மலைக்கோவில் வளாகத்தில், இரு நாட்கள் இணை ஆணையர் கவிதா முன்னிலையில், கோவில் ஊழியர்கள் உண்டியல் வசூல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் ஒரு கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 475 ரூபாய் ரொக்கமும், 495 கிராம் தங்கம், ஆறரை கிலோ வெள்ளிப் பொருட்கள், 28 கிலோ சில்வர் தகடுகள், 8 கிலோ பித்தளை, 850 கிராம் செம்பு பொருட்கள் வசூலானது. இது, கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகம்.