மேட்டூர் நீர்மட்டம் கிடு கிடு:நான்கு நாளில் 9 அடி உயர்வு
மேட்டூர் நீர்மட்டம் கிடு கிடு:நான்கு நாளில் 9 அடி உயர்வு
மேட்டூர் நீர்மட்டம் கிடு கிடு:நான்கு நாளில் 9 அடி உயர்வு
ADDED : செப் 06, 2011 12:50 AM
மேட்டூர்: கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால், மேட்டூர் அணை நீர்மட்டம், நான்கு நாளில் ஒன்பது அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை கொட்டுகிறது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவு, 124 அடி உள்ளது. நேற்று, கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பி வழிந்தது. 46,000 கன அடி நீர் வரத்தாகியது. இதில், 43 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் அனைத்தும், மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.கபினி அணையின் நீர்மட்டம், 65 அடி. இதன் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை நிரம்பி வழிகிறது. நேற்று அணைக்கு, 23,752 கனஅடி நீர் வரத்தாகியது. இதில், 23,333 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பெய்து வருவதாலும், கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம், நான்கு நாளில் ஒன்பது அடி உயர்ந்துள்ளது.நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம், 89.200 அடியாக இருந்தது. 55,638 கனஅடி நீர் வரத்தாகிறது. 13,798 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையில், 59.742 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பருவ மழை காரணமாக, மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.