ADDED : ஆக 11, 2011 11:14 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடுவது தொடர்பாக, அதிகாரிகள் நேற்று ஆலோசனை செய்தனர்.
வரும் 15ம் தேதி, நம் நாட்டின் 65வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின நிகழ்ச்சி, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. கலெக்டர் மதிவாணன், தேசியக்கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்தல், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இதற்கான ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் பங்கேற்றனர்.