பொன்முடி கைதை விமர்சிக்கும் வகையில் ஏராளமான போஸ்டர்கள்
பொன்முடி கைதை விமர்சிக்கும் வகையில் ஏராளமான போஸ்டர்கள்
பொன்முடி கைதை விமர்சிக்கும் வகையில் ஏராளமான போஸ்டர்கள்

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், சொத்து சேர்த்ததை விமர்சித்தும், ஒரே நேரத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., வினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்களில், 'தமிழக அரசே பொய் வழக்கு போடும் ஜெயலலிதாவே..
இதே போல், அனைத்து பேராசிரியர்கள் கூட்டமைப்பினர் சார்பில், நீல நிறத்தில் ஒட்டியுள்ள போஸ்டரில், 'பொன்முடியே.. கல்லூரி பேராசிரியர் பணி மூலம், சிகா மேல்நிலைப் பள்ளி, செவிலியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பிஎட்., கல்லூரி, சூர்யா பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல ஏக்கர் அளவிலான நிலங்கள்... இவற்றையெல்லாம் சம்பாதிப்பது எப்படி என்று, எங்களுக்கு சொல்லித் தருவாயா...' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் ஒரே நேரத்தில், பொன்முடி கைதை கண்டித்தும், நில மோசடி மற்றும் பல கல்லூரிகளை துவக்கியுள்ளதை விமர்சித்தும் கருப்பு, பச்சை, நீல நிறங்களில் போட்டி போட்டு, போஸ்டர் பிரசாரம் செய்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.