பட்டு வளர்ச்சியை மேம்படுத்த பயிற்சி
பட்டு வளர்ச்சியை மேம்படுத்த பயிற்சி
பட்டு வளர்ச்சியை மேம்படுத்த பயிற்சி
ADDED : ஆக 05, 2011 01:42 AM
ஊட்டி : 'பட்டு வளர்ச்சியை மேம்படுத்த பட்டுப்புழு வளர்ப்பு குறித்து நேரடி
பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது,' என
தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை சார்பில் கிரியா
ஊக்கி திட்டத்தின் கீழ், பட்டு வளர்ச்சி விழிப்புணர்வு மற்றும் இரு
சுழற்சியின புழு வளர்ப்பை ஊக்குவித்தல் கூட்டம் நேற்று நடந்தது. ஊட்டி
யு.எஸ்.எஸ்.எஸ்., அரங்கில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில், கோவை பட்டு
வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் பேசுகையில்,''பட்டு
வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நல திட்டங்கள்,
தொழில்நுட்ப அணுகுமுறைகள், மல்பரி மரங்கள் நடுவதால் ஏற்படும் பயன்கள்,
பண்ணைகள் மூலம் செய்யப்படும் உதவிகள் குறித்து அறிந்து விவசாயிகள் பயன்பெற
வேண்டும்.
விவசாயிகளுக்கு பண்ணை மூலம் பட்டுப்புழு வளர்க்க பயிற்சி கள
அலுவலர்கள் மூலம் நேரடியாக அளிக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.
யு.எஸ்.எஸ்.எஸ்., நிர்வாக இயக்குனர் ஆரோக்கியசாமி, டி.எஸ்.பி.,
சக்கரவர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் நடராஜன், கனரா வங்கி முதுநிலை
மேலாளர் ராஜ்குமார், பட்டு ஆய்வாளர்மருதாசலம், ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொழில்நுட்ப சேவை மைய உதவி ஆய்வாளர் லிங்கராஜ் வரவேற்றார். குன்னூர் உதவி
ஆய்வாளர் இஜாஸ் நன்றி கூறினார்.