/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க., பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்தி.மு.க., பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
தி.மு.க., பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
தி.மு.க., பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
தி.மு.க., பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஆக 28, 2011 11:26 PM
விழுப்புரம் :விழுப்புரத்தில் தி.மு.க., பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்ட தி.மு.க., சார்பில் சட்டசபை நடவடிக்கைகளை விமர்சித்து வரும் 30ம் தேதி பொதுக் கூட்டம் நடக் கிறது. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்குகிறார். ஆதிசங்கர் எம்.பி., வரவேற்கிறார். மாநில பொருளாளர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட தலைவர் மஸ்தான், பொரு ளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர். துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், பெரியசாமி, வேலு, தங்கவேலன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மொய்தீன்கான் உள்ளிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பலர் பேசுகின்றனர். பொதுக் கூட்டத்திற்கு ரங்கநாதன் ரோடில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகளை வரவேற்கும் விதத்தில் விழுப்புரத்தில் தட்டிகள், வரவேற்பு வளை வுகள் அமைக்கும் பணிகளை தி.மு.க., வினர் செய்து வருகின்றனர்.