திருப்பூர் : நல வாரியங்களை சீரமைத்தல், பறிக்கப்பட்ட நலன்களை, உரிமைகளை மீண்டும் வழங்கக்கோரி, ஏ.ஐ.டி.யு.சி., கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் வடக்கு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மோகன், தெற்கு சேகர், அவினாசியில் இசாக், பல்லடத்தில் மணி, பொங்கலூரில் ஈஸ்வரமூர்த்தி, தாராபுரத்தில் துரைசாமி, காங்கயத்தில் பழனிசாமி, ஊத்துக்குளியில் ஆறுமுகம் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டங்களில், 607 பெண்கள் உட்பட 1,072 பேர் பங்கேற்றதாக மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் சங்கர் தெரிவித்துள்ளனர்.