/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/விநாயகர் சிலைகள் விஜர்சனம்2 ஆயிரம் போலீஸார் குவிப்புவிநாயகர் சிலைகள் விஜர்சனம்2 ஆயிரம் போலீஸார் குவிப்பு
விநாயகர் சிலைகள் விஜர்சனம்2 ஆயிரம் போலீஸார் குவிப்பு
விநாயகர் சிலைகள் விஜர்சனம்2 ஆயிரம் போலீஸார் குவிப்பு
விநாயகர் சிலைகள் விஜர்சனம்2 ஆயிரம் போலீஸார் குவிப்பு
ADDED : செப் 12, 2011 02:23 AM
ஓசூர்: ஓசூரில், 2,000 போலீஸார் பாதுகாப்புடன் 121 விநாயகர் சிலைகளை ஹிந்து
அமைப்பினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று பச்சை குளத்தில் கரைத்தனர்.
ஓசூர் தாலுகாவில், விநாயகர் சதுர்த்தியையொட்டி ஹிந்து அமைப்புகள் மற்றும்
பொதுமக்கள் சார்பில் மொத்தம், 317 சிலைகள் வைத்திருந்தனர். இந்த சிலைகளை
கடந்த சில நாளாக பொதுமக்கள் ஏரி, குளங்களில் எடுத்துச் சென்று கரைத்து
வருகின்றனர். ஓசூர் டவுனில் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி சார்பில்
வைக்கப்பட்டிருந்த, 121 சிலைகளை ஹிந்து அமைப்பினர் நேற்று ஊர்வலமாக
எடுத்துச் சென்று, பச்சை குளத்தில் விசர்ஜனம் செய்தனர்.ஊர்வலத்தையொட்டி
ஐ.ஜி., வன்னியபெருமாள் மேற்பார்வையில் எஸ்.பி., க்கள் கண்ணன்
(கிருஷ்ணகிரி), கணேஷ்மூர்த்தி (தர்மபுரி), கரூர், நாமக்கல், நீலகிரி மாவட்ட
எஸ்.பி., க்கள், நான்கு ஏ.டி.எஸ்.பி.க்கள், ஒன்பது டி.எஸ்.பி., க்கள், 44
இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் உள்பட
மொத்தம், 2,000 போலீஸார் ஓசூரில் குவிக்கப்பட்டனர். ஊர்வலத்திற்காக, நேற்று
காலை முதல் டவுன் பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
மசூதி, கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஹிந்து கோவில்கள் முன், போலீஸார்
குவிக்கப்பட்டனர்.நேற்று மதியம் முதல் ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்துபரிஷத்
அமைப்பினர் விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நேதாஜி சாலையில்
இருந்து டேங் சாலை, எம்.ஜி., சாலை, ராயக்கோட்டை சாலை வழியாக ஊர்வலமாக
எடுத்துச் சென்றனர். ஊர்வலம் செல்லும் சாலையில் இரு புறங்களிலும்,
சிலைகளின் முன்பும், பின்பும் போலீஸார் அணிவகுத்து சென்றனர். காந்தி சிலை
அருகே ஊர்வலம் சென்றபோது, அங்கு ஹிந்து அமைப்பின் தலைவர்கள் பேசினர்.