Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு

ADDED : ஆக 02, 2011 01:03 AM


Google News
விழுப்புரம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாடு விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்தது.மாவட்ட தலைவர் வீரபாஸ்கரன் தலைமை தாங்கினார்.

பொருளாளர் சிவமுருகன் வரவேற்றார். துணை செயலாளர் வாசு கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யனார் முன்னிலை வகித்தனர். செயலாளர் சேகர் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். புதுச்சேரி அறிவியல் இயக்க நிறுவன உறுப்பினர் ஸ்ரீதரன் சிறப்புரை நிகழ்த்தினார். துணை தலைவர் தட்சணாமூர்த்தி 'சுற்று சூழலை பாதிக்காத வளர்ச்சி' பற்றி பேசினார். முன்னதாக இந்தாண்டு அறிவியல் இயக்கத்தின் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சிவமுருகன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக பாலமுருகன், பொருளா ளராக கருணாகரன், துணை தலைவர்களாக முத்துக்குமரன், சுதா, துணை செயலாளர்களாக ஆனந்தமூர்த்தி, உஷாமோகன் தேர்வு செய்யப்பட்டனர்.கல்வராயன் மலை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சண்முகசாமி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us