ADDED : ஆக 21, 2011 01:54 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் ஸ்ரீராம் பயர் ஒர்க்ஸ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
ஒண்டிப்புலிநாயக்கனூரில் ராதிகா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படுகிறது. காலை 10. 30 மணிக்கு லோடு ஆட்டோவில் குடோனிலிருந்து பட்டாசு பெட்டிகளை ஏற்றினர். அப்போது பெட்டிக்குள் இருந்த வெடிகளில் உராய்வு ஏற்பட்டதால் வெடித்தன. இதில் ஓ. நடுவபட்டியை சேர்ந்த கருப்பசாமி, 27, காயமடைந்தார். ஆட்டோவின் பின் பகுதியும் சேதமடைந்தது. ஆமத்தார் போலீசார் விசாரிக்கின்றனர். இங்கும் அறைகளின் தளத்தில் ரப்பர் சீட் இல்லை, தண்ணீர், மணல் வாளியும் இல்லை. தீயணைப்பு கருவி மற்றும் உயிர்காக்கும் கருவிகளும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.