ADDED : ஆக 07, 2011 01:41 AM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே பெண்ணை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த தாசஅள்ளிகொட்டாயை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி கனகா. இவர்களது நிலத்துக்கு அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் கோவிந்தசாமி என்பவர் தனது நிலத்தில் போர் போடுவதற்காக லாரியை கனகா நிலத்தின் வழியாக ஒட்டி சென்றுள்ளார். அப்போது, தனது நிலத்தில் அனுமதியில்லாமல் நுழைந்ததற்கு கனகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, அவரது உறவினர் ராமன் ஆகியோர் கனகாவை தாக்கினர். இது தொடர்பான புகாரில் காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரித்து, கோவிந்தசாமி, ராமன் ஆகியோரை கைது செய்தனர்.