Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தாக்கப்பட்ட சிறுவன் மாயம்: கிராமத்தில் பதட்டம் நீடிப்பு

தாக்கப்பட்ட சிறுவன் மாயம்: கிராமத்தில் பதட்டம் நீடிப்பு

தாக்கப்பட்ட சிறுவன் மாயம்: கிராமத்தில் பதட்டம் நீடிப்பு

தாக்கப்பட்ட சிறுவன் மாயம்: கிராமத்தில் பதட்டம் நீடிப்பு

ADDED : ஆக 17, 2011 02:56 AM


Google News
ப.வேலூர்: ப.வேலூர் அருகே மாயமான சிறுவனை மீட்டுத்தரக்கோரியும், அவரை தாக்கிய இரு வாலிபர்களை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, குமாரபாளையம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ப.வேலூர் அருகே கீழ்பாலப்பட்டி குமாரபாளையத்தை சேர்ந்த நிஷான் (13), பூவரசன் (11), நிதிஷ் (9), சந்துரு (9) ஆகிய நான்கு சிறுவர்களும், நேற்று முன்தினம் மாலை காவரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் ஒருவரை ஒருவர் திட்டியபடி குளித்துள்ளனர். அங்கு குளித்துக் கொண்டிருந்த காமராஜர் என்பவரது மனைவி ஜெயந்தி, சிறுவர்களை கண்டித்துள்ளார். சிறுவர்கள் கண்டு கொள்ளாததால், அதுபற்றி கணவனிடம், ஜெயந்தி தெரிவித்துள்ளார். அதையடுத்து ஆற்றுக்கு சென்ற இரு வாலிபர்கள், குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை, தாக்கியுள்ளனர். அதன்பின், நிஷான் மட்டும் வீடு திரும்பவில்லை. ஆற்றில் நடந்த சம்பவத்தை மற்ற சிறுவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் மற்றும் அவர்களை தாக்கிய இரு வாலிபர்களும், இரு வேரு சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனால், இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் பதட்டத்தை தணிக்கும் வகையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே சிறுவன் நிஷானை மீட்டுத் தரக்கோரியும், சிறுவர்களை தாக்கிய வாலிபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று காலை குமாரபாளையம் பஸ் ஸ்டாப் அருகே மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை, போலீஸார் சமதானப்படுத்தினர். போலீஸார் நடவடிக்கையில் திருப்தியடையாத மக்கள், மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் செய்ய உள்ளனர். கிராமத்தில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால், டி.எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us