/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஊராட்சி வார்டு பிரிப்பில் குளறுபடி கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சிஊராட்சி வார்டு பிரிப்பில் குளறுபடி கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சி
ஊராட்சி வார்டு பிரிப்பில் குளறுபடி கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சி
ஊராட்சி வார்டு பிரிப்பில் குளறுபடி கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சி
ஊராட்சி வார்டு பிரிப்பில் குளறுபடி கருத்து ஒற்றுமை உருவாக்க முயற்சி
ADDED : ஜூலை 25, 2011 10:21 PM
தேனி : மாநிலம் முழுவதும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வார்டு பிரிப்பதில் குளறுபடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்காக, கிராம ஊராட்சிகளில் இரண்டு மற்றும் மூன்று உறுப்பினர் வார்டு முறை மாற்றப்பட்டு ஒரு உறுப்பினர் வார்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊராட்சிகளில் வார்டு பிரிக்கும் பணி நடக்கிறது. இதில் குளறுபடி நடந்து வருவதாக தேர்தல் பிரிவிற்கு புகார்கள் குவிந்துள்ளன. வார்டு உறுப்பினராக போட்டியிட திட்டமிட்டுள்ளவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வார்டுகளின் எல்லைகளை மாற்றி அமைப்பதாகவும், பெண் வார்டுகளை ஆண் வார்டுகளாக மாற்றி வருவதாகவும், இதற்கு சில இடங்களில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வார்டு பிரிப்பு பணிகள் குறித்து ஒருமித்த கருத்து உருவாக்கும் பணியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.